Developed by - Tamilosai
53ஆவது நாளாகவும் தொடர்ந்து வரும் காலிமுகத்திட கோட்டாகோகம போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை ஏற்பட்டு வருகின்ற நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக கோட்டாகோகம பகுதியில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்துள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.