தமிழ் ஓசை
தமிழ் ஓசை

துவிச்சக்கரவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

0 123

வெல்லவாய, தனமல்வில வீதியின் புதுராகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

வீதியின் குறுக்காக மாறுவதற்கு முற்பட்ட துவிச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் புதுராகல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.