Developed by - Tamilosai
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலை வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவை , ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்த்தினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரை கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் (31) உத்தரவு பிறப்பித்திருந்தது.
மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடை நிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றமே
அவரை கைது செய்யுமாறும் கட்டளையிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க விடுதியில் துமிந்த சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என நேற்று மதியம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதற்கமைய வைத்தியசாலைக்குச் சென்ற சீ.ஐ.டியினர் அவரைக் கைது செய்துள்ளனர்.