தமிழ் ஓசை
தமிழ் ஓசை

துன்னாலை அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவிக்கு சிறு காயம்

0 147

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

வழமை போன்று இன்றைய தினம் காலையில் விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது ,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது.

அதன்போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

அதேவேளை அடுப்பு வெடித்து சிதறிய அதிர்வில் , சமயலையின் சீலிங் சீட்டும் வெடித்துள்ளது. 
எரிவாயு சிலிண்டரை நேற்றைய தினமே மாற்றி இருந்ததாக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.