Developed by - Tamilosai
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவில் ஒன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர், 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் நேற்று (13) இரவு 8.00 மணி அளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.