தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0 50

ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி ஏற்படும் பட்சத்தில் பெரசிட்டமோல் தவிர வேறு எந்த வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என்றும், விரைவாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தேசிய தொற்று நோய்களுக்கான மையத்தின் பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 51.2 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 08 நாட்களில் மாத்திரம் 2,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் (09) 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் 16 மாவட்டங்களில் 83 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர நேற்று (10) தெரிவித்தார்.

ஹன்வெல்ல, கஹதுடுவ, பத்தரமுல்லை, இரத்மலானை, எகொடஉயன மற்றும் கொதடுவ ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக கருதப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப் பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.