தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘தீர்வை காண்போம் ஒன்றிணைந்து ’ – எதிரணிக்கு நிதி அமைச்சர் அழைப்பு..

0 419

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசால் மட்டும் தனித்து தீர்வை தேட முடியாது.

எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.” – என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுகள் சாதகமாக நிறைவடைந்துள்ளன. நாம் எவற்றையும் ஒளிக்கவில்லை. பேசப்பட்ட விடயங்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும்.

தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்க்க எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம் .

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சிறப்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சிறந்த ஒருவர் வந்தால், நான் எனது பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார். அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை தேட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் லெபனானின் நிலைமையே இங்கு ஏற்படும். – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.