தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தீபாவளியன்று 28 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளை!

0 114

தீபாவளிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வீடுதிரும்பிய போது பூட்டியவீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள், உட்பட 28 இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (04) மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மைலம்பாவெளி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான தீபாவளி தினத்தையிட்டு காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு மதியம் ஒரு மணியளவில் வீடுதிரும்பிய போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறைக் கதவு உடைத்து அறையில் இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலட்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் மோப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.