Developed by - Tamilosai
தி கிரே மேன் படத்தைத் தொடர்ந்து, இன்னொரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் இடம் பெற உள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் கோலிவுட் முன்னணி நடிகர் தனுஷும் இடம் பெற்றுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு அவிக் சன் (AVIK SAN) என்ற கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.
ரூசோ பிரதர்ஸ் குறித்து, தனுஷ் பேட்டி அளித்துள்ளபேட்டியில், ரூசோ பிரதர்ஸ் சிறந்த டெக்னிசியன்கள் என்றும், எதனை படமாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள் என்றும், நடிகர்களிடம் எதை வேண்டுமோ அதை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.