தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள் திறப்பு

0 118

எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு  திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் சிரமதானம் நடைபெற்றது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் மாணவர்களது உளவியல் தொடர்பான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும், ஆளுநர் மேலும் தெரிவித்தார் .

இதேவேளை, பாடசாலை செயற்பாடுகளைச் சுமுகமான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை அரசாங்க அதிபர் என்ற அடிப்படையில்தான் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.