தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருகோணமலை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு

0 448

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் திருகோணமலை நகருக்கு அண்மையாக உள்ள சாம்பல்தீவு சந்தியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வெற்று சிலிண்டர்களுடன் நடுவீதியில் இன்று அதிகாலை ஒரு மணி முதல் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் குறித்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஒரு தொகுதி திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்புவதாகவும் மிகுதி இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உணவகங்களுக்கு ஒதுக்கியதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவ்வாறு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதுமானதாக இல்லை எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இறக்குமதி செய்யப்பட்டு திருகோணமலைக்கு என ஒதுக்கப்படும் சிலிண்டர்கள் அனைத்தும் அவ்விடத்தில் வைத்து தினம் தினம் பகிர்ந்தளிக்கப்படும் என வினியோகம் செய்பவர்கள் தெரிவித்த அதே வேளை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருது எரிவாயு சிலிண்டர்களை பெற்ருச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.