Developed by - Tamilosai
நேற்று (15) நள்ளிரவு திருகோணமலை தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேதீஸ்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலை மகமாயபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.பி.பிரதீப் கெலும் (வயது-34) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றைய தினம் நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டதாகவும், பின்னர் நள்ளிரவு வேலையில் இவ்வாறு சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.