Developed by - Tamilosai
திருகோணமலை – நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்ஷினி அண்ணாதுரையால் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பக்கத்து வீட்டுச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.