தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திடீரென வந்த பிரச்சினையல்ல- மின்சார பிரச்சினை

0 184

மின்சார துறையினர் பல ஆண்டுகளாக மாஃபியா ஒன்று செயற்பட்டு வருவதாகவும் மின்சார பிரச்சினை என்பது திடீரென வந்த பிரச்சினையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மின்சார துறையின் தொழில்நுட்ப பிரிவுகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத துரதிஷ்டம் காரணமாகவே மக்கள் இருளில் இருக்க நேரிட்டுள்ளது.
மின்சார நெருக்கடி இல்லாத காலத்தில் தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பில்லியன் கணக்கில் பணம் செலவிடப்படுவது நாட்டு மக்களுக்கு தெரியாது.
நீண்டகாலமாக தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது.
எரிபொருள் நெருக்கடி, நிலக்கரி பிரச்சினை, பொருளாதார நெருக்கடியுடன் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
தொழிற்நுட்ப மற்றும் அரசியல் தரப்பினர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திஇ பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் மற்றும் நலன்புரி சேவைகளை வழங்குவது முக்கியமானது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.