தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தாய்வான் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை – சீனா உறுதி

0 195

தாய்வான் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளமைக்கு பதில் வழங்கும் வகையில், சீன வெளிவிவகார அமைச்சகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளா் வாங் வென்பின் தெரிவிக்கையில்: ‘சீனாவின் இறையாண்மை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பொருத்தவரை சமரசத்துக்கோ, சலுகைகளுக்கோ சிறிதும் இடமில்லை.

தாய்வான் தீவு சீனாவின் பிரிக்க முடியாத அங்கமாகும். தாய்வான் பிராந்தியத்துக்கும் எங்களுக்கும் இடையிலான பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையாகும்.

இதில் வெளிநாடுகள் தலையீடு செய்வதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது’ என மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.