Developed by - Tamilosai
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெற செய்ய வேண்டும் என எடுத்த தீர்மானம் நேர்மையாக எடுத்த தவறான முடிவு என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் ரகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
“வாழ்க்கை ஒருவர் ஒரு முறையாவது ஏமாற்றமடைந்திருப்பார். இதுவும் அது போன்ற ஒன்று. என்னால் ஏமாற்றமடைந்தவர்கள் தயது செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். நேர்மையாக எடுத்த தவறான தீர்மானம்.” ரகித ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரகித ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர மிகப் பெரிய பங்களிப்புகளை செய்தவர் எனவும் அவரது தந்தையான விஜயதாச ராஜபக்சவும் கோட்டாபயவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு பெரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.