தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் -சிவஞானம் சிறிதரன்.

0 155

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை கட்டியெழுப்பும் நோக்குடன் சேவையாற்றிவரும் மக்கள் நலன் காப்பகத்தின் பொங்கல் விழா 17-01-2022 மாங்குளத்தில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பக நடுவப்பணியகத்தில் இடம்பெற்றது

பொங்கல் நிகழ்வுகளை தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது

 நிகழ்வில்  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ,மக்கள் நலன் காப்பகத்தின் நிறுவுணர்களில் ஒருவரான திருமதி பிரபாகரன்  உதயகுமாரி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தி.கிந்துஜன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட  இணைப்பாளர்கள் மக்கள் நலன் காப்பகத்தின் ஊழியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இந்த பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்

உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து ஒரு  தேசத்தின் கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையினுடைய அகல ஆழங்களையும்  தேடிக்கொண்டிருக்கின்ற சுதேசிய இனமான நாங்கள் எங்களை பொருளாதார றீதியாக   தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள்  நாங்கள் நிற்கின்றோம் இன்று அரசியல் வாழ்வில் கூட கௌரவமான நியாயமான நேர்மையான நிலைகளிலிருந்து பின்தள்ளப்பட்டிருக்கின்றோம்  இந்த தீவில் தேசிய இனமாகிய தமிழ்  தேசிய இனத்தினுடைய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய சமூகக் கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது

இந்த  பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதில் உலகத்தின் மிகப்பெரிய டயஸ்போராவாக  புலம்பெயர்ந்து வழும்  ஈழத்தமிழர்கள் உள்ளனர் தங்களால் இயன்ற  பொருளாதார வளங்களை பயன்படுத்தி வல்லமைகளை பயன்படுத்தி இங்கு வாழும் மக்களின்  பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம்

ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது இன்னும் சுதந்திரமான வாழ்வு இல்லை  நாங்கள் இலக்கு நோக்கி பயணிக்க கூடிய சக்தி  வாய்ந்தவர்களாக நாங்கள் இல்லை கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாங்கள் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

Leave A Reply

Your email address will not be published.