Developed by - Tamilosai
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வலிமை வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என சமீபத்தில் வெளியான கிலிம்ப்ஸ் வீடியோவில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கின்றார்.
இதனிடையே இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன ஒன் லைன் அஜித்திற்கு பிடித்ததால் ஓகே கூறியுள்ளார் அஜித்.
மேலும் தற்போது அஜித் வினோத்திடம் முழு கதையையும் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கூறிய முழுகதையில் அஜித்திற்கு திருப்தியில்லாததால் வேறுகதையை வினோத் தற்போது எழுதி வருவதாக கூறப்படுகிறது.