தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தலைமன்னார் தபால் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா!

0 86

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்றைய தினம் (16) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விடுத்துள்ள நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமன்னார் பகுதி தபால் நிலையத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த தபால் நிலையம் உட்பட மேலும் சில உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.