தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தலிபான்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆப்கான் பெண்கள்

0 94

ஆப்கானிஸ்தான் பெண்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்துவதில் வரையறைகள் இருப்பதாக தெரிவித்து தலைநகர் காபூலில் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் உட்பட சர்வதேச தரப்பினர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், பெண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்வதற்கும், பெண்கள் தங்கள் வேலைகளுக்குத் திரும்புவதற்கும் வழிவகுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

‘ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் மௌனத்திற்கு எதிராக எங்கள் குரலை எழுப்புவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம்’ என்று போராட்டத்தில் பங்கேற்ற அரிஃபா பாத்திமி கூறினார்.

‘ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் அரைப்பங்கினர் அகற்றப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் உரிமைகளை இழந்துவிட்டோம். இந்நிலைமை தொடர்வது ஆபத்தானது ‘ என்று மற்றொரு போராட்டக் காரரான மர்ஜான் அமிரி கூறினார்.

இதேவேளை, பல பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்றும், இது தொடர்பாக சர்வதேச சமூகம் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.

‘சர்வதேச சமூகம் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தால், பெண்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதிலுள்ள வரையறைகளை நீக்க முடியும்’ என்று பெண் உரிமை ஆர்வலர் சர்க்கா யாப்தலி கூறினார்.

தலிபான்களின்  ஆட்சிக்காலத்தில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.