தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தலவாக்கலை வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலி

0 23

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலியை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று (4) இரவு 11 மணியளவில் இலங்கைக்கு உரித்தான புலி ஒன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது.

நாய் ஒன்றை துரத்தி வந்த குறித்த புலி வீட்டின் கூரை மீது ஏறியபோது, கூரை உடைந்ததால், வீட்டுக்குள் விழுந்துள்ளது. இதன்போது வீட்டிலுள்ளவர்கள் பயந்து என்னவென்று பார்த்தபோது சுமார் 6 அடி நீளமான புலி வீட்டுக்குள் விழுந்ததை பார்த்துள்ளனர்.

இதன்போது வீட்டுக்குள் இருந்த புலியை பார்வையிட சென்ற குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் புலியின் தாக்குலுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்த ஏனையோர் வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து, லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் ரந்தனிகல மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்ததுடன், அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, குறித்த புலியை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசியை செலுத்தி மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க இலங்கைக்கு உரித்தான ஆண் புலியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.