Developed by - Tamilosai
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாக தெரிவித்தார்.
எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வறட்சியான காலநிலையால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் பரவக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.