தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தற்போது கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிடும் நிலை

0 444

சிறிலங்காவில் தற்போது கையிருப்பில் உள்ள பைசர்  தடுப்பூசிகள் காலாவதியாகிவிடும் நிலையை அடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தடுப்பூசிகள் ஜூலை இறுதிக்குள் காலாவதியாகிவிடும் என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பைசர் தடுப்பூசிகளின் காலாவதி திகதியைப் பொறுத்தவரை, தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், தடுப்பூசி வழங்கும் செயற்பாடு குறைந்தபட்சம் 80 சதவீதத்தை எட்டவில்லை எனின், தடுப்பூசிகள் எரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்கா சுகாதார அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்கா கொவிட்19 ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஒவ்வொரு மருந்து மற்றும் தடுப்பூசிக்கும் அதன் காலாவதி திகதி இருப்பதாகவும், அதேபோல் தற்போதுள்ள பைசர் தடுப்பூசிகள் ஜூலையில் காலாவதியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேலதிக பூஸ்டர் அளவுகளை பெறுவதில் மக்கள் இன்னும் சிறிது தயக்கம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இருந்ததை விட எண்ணிக்கை மேம்பட்டுள்ளதாகவும், மேலதிக மூன்றாவது அளவை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 55 சதவீதத்தை நெருங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால், தவறான தகவல்களால் ஏமாறாமல், மேலதிக அளவு மருந்தைப் பெற வேண்டும் என சிறிலங்கா கொவிட்19 ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.