Developed by - Tamilosai
தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியியலாளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த அதிகார சபையின் தரவுத் தளத்தை பராமரித்து வந்த எபிக் லங்கா ரெக்னோலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளரே இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.