Developed by - Tamilosai
இந்தியாவிலிருந்து உயர்தர திரவ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகிறார்.
இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் அம்பாறை மற்றும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு மாதத்தின் இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட விவசாய அபிவிருத்தி அலுவலகத்திற்கு ஏற்கனவே போதுமான அளவு உரம், இயற்கை உரம் மற்றும் பொட்டாசியம் குளோரைட் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயத்தை கைவிட்ட பல விவசாயிகள் நெற்செய்கைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட விவசாய மேம்பாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.