தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழ் முற்போக்கு கூட்டணி பிளவுபடாது

0 115

” தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித பிளவும் இல்லை. நாம் ஒன்றாகவே பயணிக்கின்றோம். அடுத்த தேர்தலையும் ஒன்றாகவே எதிர்கொள்வோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் 16.01.2022 அன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியா மலையக மக்களுக்கும் எமது நாட்டுக்கும் பல உதவிகளை வழங்கி வருகின்றது. ஆபத்தான நேரங்களில் கை கொடுக்கின்றது. அதேபோல இந்தியாவின் உதவிகள் எமக்கு தொடர்ந்து கிடைக்கும். இந்நிகழ்வில் இந்திய தூதுவர் பங்கேற்றமையால் நுவரெலியா மாவட்டம் பெருமையடைகின்றது. நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படுகின்றோம். இனியும் செயற்படுவோம். தேர்தல்களையும் கூட்டணியாகவே எதிர்கொள்வோம்.” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.