Developed by - Tamilosai
அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.