தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழ்பேசும் மக்களை பிரிப்பதற்காக நாடாளுமன்றத்தில் புதிய நாடகம் – சாணக்கியன்

0 136

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களை பிரிப்பதற்காக நாடாளுமன்றத்தில் புதிய நாடகம் அரங்கேற்றப்படுகின்றது இதற்கு பிள்ளையான் உறுதுணை. அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் நாடாளுமன்றஉறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

விசேடமாகநீங்கள் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், இதற்கு ஆதரவாக வாக்களிக்கநீங்கள் என்றால் பல நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

“நீண்டகாலமாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, முகநுால் பதிவுகளுக்காக சிறைகளிலுள்ளவர்களின் விடுதலை, வடக்கு- கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துங்கள்.“ என நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

அதேபோன்றுஇஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், ‘ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தால் சம்பவத்துடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின்விடுதலை, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாசாங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதனைநிறுத்துக்கள்,ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினை கலையுங்கள்.“

உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.மேலும்அண்மையில் கிண்ணியாவில் படகுவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள்அனைவரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

அங்கே சிறுவர்கள்உயிரிழந்த நிலையில் இங்கே களனிபாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் நீங்கள்சிந்தித்து பார்க்க வேண்டும். அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார் .’ இவர்கள்ஆடுகின்ற சேர்ந்து நாடகம் ஆடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.