Developed by - Tamilosai
இலங்கை அரசாங்கமானது தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காணிகளைப் பறிப்பதிலும் தமிழர்களை இல்லாது அழிப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே- 23 கிராம அலுவலர் பிரிவிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியை பொலிஸாருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யும் பொருட்டு இன்று நில அளவை திணைக்கள அதிகாரிகள் கிராம அலுவலர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
இதற்கான எதிர்ப்பை தெரிவித்த பின்னர் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்:
யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கமானது ஒரு பகற்கொள்ளை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி அவர்களின் காணிகளைப் பறிப்பதிலும், அவர்களுக்கான உரிமைகளைத் தடுப்பதிலும் அரசாங்க அரச படைகளும் குறிப்பாக பொலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றையதினம் குறித்த காணி உரிமையாளர்கள் பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் பிரதிநிதி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த வேளையிலே பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் அச்சுறுத்தி கைது செய்வோம் என்றார்கள். இருந்தபோதும் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
இலங்கை அரசாங்கமானது வடக்கு – கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் அவர்களுடைய பூர்வீக காணிகள் பறிப்பதிலும் தமிழர்களை இல்லாதொழிப்பதற்கும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் அதன் ஒரு வடிவமாகவே இன்றைய காணி அளவீட்டு நடவடிக்கை அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகள் இவ்வாறான விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உரிமைக்காகத் தொடர்ந்தும் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.