தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழக வீரர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம்

0 238

தமிழக வீரர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் பெரிய தொகையில் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், டி20யில் அணிக்கு அதிரடி ஃபினிஷிங் அவசியம். அவருக்கு அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், கொல்கத்தா போட்டியிலிருந்து விலகியதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் சென்னையுடன் மோதியது. இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி ஏலம் எடுக்க விலை ரூ. 7 கோடியைத் தாண்டியது.

சென்னை அணி ரூ. 8.75 கோடி வரை தாக்குப்பிடித்தது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஷாருக் கானைத் தேர்வு செய்தது.

ஷாருக் கான் இதுவரை 50 டி20 ஆட்டங்களில் விளையாடி 547 ஓட்டங்கள் எடுத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.