Developed by - Tamilosai
இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடலிறக்கப் பிரச்சினைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான தொடர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.