Developed by - Tamilosai
இந்தியாவின் தமிழகத்தில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் அதனையொட்டிய இலங்கைக் கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது நீடித்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.