Developed by - Tamilosai
தமிழ் பட நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், ´´நான் நேசிக்கும் ஒரு நபர் நான் மட்டுமே. எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கிட்டாருடன் நேரத்தை செலவிடுகிறேன்.
கல்யாணம் என்பது உடலுறவு பற்றியதில்லை. அன்பும் நேர்மையும் பற்றியது. நான் இவற்றை எதிர்பார்த்து என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அதனால் நான் தனியாக வாழ்வது என முடிவெடுத்துவிட்டேன். என்று கனிஷ்கா குறிப்பிட்டுள்ளார்.