தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தனிவழி பயணத்துக்கு தெளிவானதொரு முடிவை எடுத்துள்ளோம்- ரோஹன லக்ஷ்மன் பியதாச

0 127

அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதென ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தேங்காயொன்றின் விலை 100 ரூபா. 5 ஆயிரம் ரூபாவை அச்சிட்டு வழங்குவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. குறிப்பிட்டளவு அரச ஊழியர்களே இருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளுக்கும் போஷாக்கு கிடைப்பதில்லை. என்ன செய்வதென சுதந்திரக்கட்சியிடம் பலரும் கேட்கின்றனர். நாம் தெளிவானதொரு முடிவை எடுத்துள்ளோம்

Leave A Reply

Your email address will not be published.