Developed by - Tamilosai
தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 (IV) இன் ஏற்பாடுகள் மேற்படி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.