தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தனியார்,அரச பணியாளர்கள் வீடுகளில் இருந்து உணவுகளை கொண்டு வருமாறும் உணவக உரிமையாளர்கள் சங்கம்

0 88

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நுகர்வோர் தங்களது உணவு தேவைகளை பெற்றுக் கொள்வதில் கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

தொடரும் நெருக்கடி, எரிவாயு தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணிகளால் 60 சதவீதமான உணவகங்கள் மூடப்பபட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,எரிவாயு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் 60 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எனவே தனியார் மற்றும் அரச பணியாளர்கள் வீடுகளில் இருந்து உணவுகளை கொண்டு வருமாறும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.