தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் கைது

0 56

மொனராகலை,எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடியாகல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதான தனது தங்கையை கர்ப்பிணியாக்கிய 16 வயதான சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளார் .

தங்கை ஆறாம் வகுப்பில் கல்வி பயிற்று வருபவர் என்றும் சகோதரன் 11 வகுப்பில் பயின்று வருகின்றார் என்றும், இவ்விருவரும் ஒரே பாடசாலையிலேயே கற்று வருகின்றனர் எனவும், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி வயிற்று வலியால் அவஸ்தைபட்டபோது, அவரை பெற்றோர் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் . அதன்போதே, சிறுமி கர்ப்பிணியாக இருக்கும் விடயம் வெளியானது. சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னுடைய சககோதரனே துஷ்பிரயயோகம் செய்துள்ள விடயத்தைக் கூறியுள்ளார் மேலதிக வைத்திய பரிசசோதனைக்காக சிறுமி, மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

சகோதரனை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.