Developed by - Tamilosai
இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவரது மீன்பிடி படகு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியது. பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்பாக இன்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி ஆலடிப் பகுதியில் தமது படகுகளை எரித்து போராட்டத்தை கடற் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற் தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.