Developed by - Tamilosai
கம்பளை – மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சித்தப்பா நேற்றைய தினம் அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளார்.
பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (வயது – 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறியதந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.