Developed by - Tamilosai
நேற்று (07) திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார்திடல் பகுதியில் தந்தை செலுத்திய வேனுக்குள் சிக்கி ரஜீந்தன் நட்சத்திரா (02) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தை வேனை பின்னால் எடுத்த போது சிறுமி தடக்கி வீழ்ந்து வேனுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.