Developed by - Tamilosai
ரஷ்யா உக்ரைன் மீது ஒக்சிஜனை உறிஞ்சி வெடிக்கும் “vacuum” குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவர் ஒக்சானா மர்கரோவா (Oksana Markarova) தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து கிடைக்கும் இராணுவ தகவல்களை அடிப்படையாக கொண்டு, தூதவர் இதனை கூறியுள்ளார். “vacuum” குண்டுகளை “Thermobaric” ஆயுதம் அல்லது உஷ்ண குண்டுகள் என அழைப்பார்கள்.இந்த குண்டுகள் வெடிக்கும் போது வெடிக்கும் இடத்தில் உள்ள ஒக்சிஜன் உறிஞ்சப்படும். ஒக்சிஜன் உறிஞ்சப்படும் போது “vacuum”உருவாகும். இதன் காரணமாக இதனை “vacuum” குண்டுகள் என அழைக்கின்றனர். இந்த குண்டு வெடிக்கும் ஒக்சிஜன் உறிஞ்சப்பட்ட இடங்களை நோக்கி தீப் பரவும் எனக் கூறப்படுகிறது.
ஜெனிவா இணக்கப்பாடுகளுக்கு அமைய இப்படியான “vacuum” குண்டுகளை போர்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்தது. போர் ஆரம்பித்து இன்று ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ளன.