Developed by - Tamilosai
தடையில்லா மின்சாரம் மீண்டும் தடைபட பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததே காரணமாகும்.
அவற்றுள் நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையமான களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையமும்,மத்துகம, கொலன்னாவ மற்றும் துல்ஹிரிய மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதற்கு டீசல் மற்றும் உலைஎண்ணெய் பற்றாக்குறையே காரணமாகும்.
இதன்காரணமாக , 490 மெகாவோட் வீதம் இழக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இன்று கிடைக்காவிட்டால் தடையில்லா மின்சாரம் வழங்குவது சவாலாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று நாட்டின் அதிகபட்ச மின்சாரத் தேவை 2,626 மெகாவாட்டாக இருந்தது. இதில் 74.11 சதவீதம் நிலக்கரி மற்றும் எரிபொருளால் முடிக்கப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி 23.11% ஆக குறைக்கப்பட்டுள்ளது.