Developed by - Tamilosai
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விதத்தில் சட்ட ரீதியான நிலைமையைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடை எதிர்காலத்தில் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.