Developed by - Tamilosai
நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13:15 மணியளவில் ஜேர்மனியின் தென்கிழக்கு மாநிலமான பவேரியாவில் தொடரூந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர்.
இவ் விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இந்த தொடருந்தில் பெரும்பாலான மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேர் உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்சினையே காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.