தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட இரு சிறுமிகள்

0 48

கிளிநொச்சி – பெரியபரந்தனில் இரு சிறுமிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு,  தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு , எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை” என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும்  தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.  

நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுரேஸ்குமார் தனிகை மற்றும் லோகேஸ்வரன் தமிழினி என்ற 17 வயதுடைய சிறுமிகளே தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு  தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.  

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார்  சடலங்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.