Developed by - Tamilosai
உலகளாவிய பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி வீதத்தை உயர்த்தினால் தங்கத்தின் விலையில் சரிவை எதிர்பார்க்கலாமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. அது இன்று வரையில் சிறிய தளம்பலுக்கு மத்தியிலும் உயர்வான விலையினையே கொண்டுள்ளது.
எனினும் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும் தங்கத்திற்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.