Developed by - Tamilosai
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதம் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும், கடந்த வருடம்(2021) மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் மே மாதம் அனுப்பப்பட்ட பணம் மிகக் குறைவானதாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் ஏப்ரல் மாதத்தில் அனுப்பிய தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேசமயம் மே மாதம் அவர்கள் அனுப்பிய பணம், 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஆயினும் கடந்த வருடம் மே மாதம் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 460.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.