Developed by - Tamilosai
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்ததை அடுத்து, ரஷ்ய நாணயமான ரூபிள் டொலருக்கு எதிராக 40% வரை சரிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கிய சர்வதேச கட்டண முறையான “SWIFT” இல் இருந்து துண்டிக்க ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
“SWIFT” என்ற உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்புக்கான சமூகத்திலிருந்து பல ரஷ்ய வங்கிகளை துண்டிக்கும் நடவடிக்கை உக்ரேன் மோதலின் பின்னர் மொஸ்கோ மீது சுமத்தப்பட்ட கடுமையான நடவடிக்கையாகும்.
ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும், இது நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும்.
ரஷ்யா அதன் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு SWIFT அமைப்பையே பெரிதும் நம்பியுள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்களும் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $100 (£75)க்கு மேல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.