Developed by - Tamilosai
‘டெல்டா ப்ளஸ்’ என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வழமையான டெல்டாவை விட எளிதாகப் பரவக்கூடியது என்று பிரித்தானிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ‘AY.4.2’ என்ற டெல்டா மாறுபாட்டின் புதிய பிறழந்த வடிவம் ‘டெல்டா ப்ளஸ்’ என்று அழைக்கப்பட்டது.
தற்போது அது VUI-21OCT-01 என இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளது.
இது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகையை விட மிக வேகமாகப் பரவியதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சமீபத்திய நாட்களில் நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.