Developed by - Tamilosai
இலங்கையில் பீ.1.617.2.104 என்ற மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பீ.1.617.2.28 என்ற டெல்டா உப வைரஸ் திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்